Owner
தன்பாகம் இனிநீயேஎன உடல்இடப் பகுதி...
பகிர்ந்தும், பார்வதி யைமறந்து;
என்தாகம் தணிஎன்று மைத்துன னைநோக்க;
சிதறிட்ட மோக தீஅணைக்க பயந்து;
பெண்மோகினி ஓட பின்தொடர்ந்து துரத்திட்ட...
காம இறைவன் சிவன்அல்ல நீ!
தேகம்கோ யில்மணி அடிக்கதினம் மாறி மாறி;
ஏகமாய் பெண்கள் இரண்டா யிரம் கோபியராம்!
நாகம் சீறபிர பஞ்சத்துள் பாற்கடல் அசைய...
வேகம்தணிந் தஅந்த கதைத்திருடனும் அல்லநீ!
பார்வதி தேகம் வழித்து உருட்டி திரட்டிட்ட
அழுக்குப் பிள்ளை அல்லநீ!
சிவனுள் தெறித்துதித்த இரண்டு மனைவி
கண்டோன் கந்தவேலும் அல்லநீ!
சாதிமத இருட்டுஒழிய விலக்கிட்டேன்; நீஎனக்கு...
பாதிசுகம் பகிர்ந்தால் வேற்றுமைஅற்று சிரிப்பேன்!
பேதம்காத லில்இல்லை சாதனைபுரி வாஎன்தலித்
ஆதவ! ஒற்றுமை உறவுஒளி நிலம்உணர பரவிடு!
Owner
No comments:
Post a Comment