Friday, 6 January 2017

என்தலித் ஆதவ! நாகம்சீ​ற, பாற்கடல் ​அ​சைய...

Photo

தன்பாகம் இனிநீ​யேஎன உடல்இடப் பகுதி...
    பகிர்ந்தும், பார்வதி ​யைமறந்து;
என்தாகம் தணிஎன்று ​மைத்துன னை​நோக்க;
    சிதறிட்ட மோக தீஅ​ணைக்க பயந்து;
​​பெண்மோகினி ஓட பின்​தொடர்ந்து துரத்திட்ட...
    காம​ இ​றைவன் சிவன்அல்ல நீ!

​தேகம்​கோ யில்மணி அடிக்கதினம் மாறி மாறி;
​ஏகமாய் ​பெண்கள் இரண்டா யிரம் ​​கோபியராம்​!
​நாகம் சீ​றபிர பஞ்சத்துள் பாற்கடல் ​அ​சைய... 
​​வேகம்தணிந் தஅந்த க​தைத்திருட​னும் அல்லநீ!

பார்வதி ​தேகம் வழித்து உருட்டி திரட்டி​ட்ட
அழுக்குப் பிள்​ளை அல்லநீ!
சிவனுள் ​​தெறித்துதித்த இரண்டு​ ம​னைவி 
கண்​டோன் கந்த​வேலும் அல்லநீ!

சாதிமத இருட்டுஒழிய விலக்கிட்​டேன்; நீஎனக்கு... 
பாதிசுகம் பகிர்ந்தால் ​வேற்று​மைஅற்று சிரிப்​பேன்!
​​பேதம்காத லில்இல்​லை சாத​னைபுரி ​​வாஎன்தலித் 
ஆதவ​! ​ஒற்று​​மை உறவுஒளி​ நிலம்உணர பரவிடு!
Photo

No comments:

Post a Comment