Friday, 7 April 2017

கொலையுண்ட ஆரிய அன்னியன் பத்மசுரன்* பார்பன அரக்கன்!?

C5joepiu0aa2-d9
KRS | கரச10h
என் ஒரே "இதய தெய்வம்".. இவன் தான்:) -- வேறு எந்த மாண்புமிகு, இதயத் தெய்வமும் இல்லை!:) 

தமிழ்அருவி உனதேஎன் றாக்கி தடிக்கிழவி** 
மனம்குளிர...
அமிழ்தம்என தந்திட்டதும் *ஆரியனை-நீ 
கொன்றிட்டதும்;
தமிழ்நிலம்போல் மெய்என்றால் சங்கம்கண்ட;
முருகா! எம்...
உமிழ்தளத் தில்இந்தி உமிழ்நீர் வெறுப்பில்;
சுரக்கலாமோ துரத்து! 

** ஒளவையார்

*விளக்கம்:

தமிழ்கடவுள் முருகன் போரிட்டு பத்மாசுரன் 
அசுரனைக் கொன்றதாக ஓர் கதை பார்பன
ரால் ஓதப்படுகிறது. அந்த ஊழல் கற்பனை
யில்...

கதைப்படி, பத்மாசுரன் தமிழ் அரசனாக இருந்
திருக்கும் பட்சத்தில், அவனை கொல்ல தமிழ் 
முருகன்; மூவேந்தர்களின் பகைவனாகவோ 
அல்லது மூர்க்க 'ஆ ரியனாகவோ' இல்லை.  

தேவேந்திரன் எனப்படும் ஆரியன், மகாபாரதம் 
கதைப்படிக்கு மூர்க்கனாக திகழ்ந்தான் [தேவேந் 
திரனை நேர்மையற்றவன் என்று சிவன் ஆதா 
ரங்களை அடுக்கியுள்ளான்] 

மகாபாரதம் கதைப்படிக்கு தேவேந்திரன், பசு
மாட்டின் இளங்கன்று ஒன்றை அடியாளை ஏவி 
கொன்று சூத்திரன் கர்ணன் மீது கொலைக் குற் 
றச்சாட்டை தந்திரமாக சுமத்தினான். அதனால் 
பார்ப்பன வயோதிகன் ஒருவனின் கோபத்துக்கும் 
சாபத்திற்கும் கர்ணன் ஆளாகினானாம். அது
நிலையால் கண்ணனும் அஞ்சும் படியாக புகழ் 
பெற்ற கர்ணனுடைய போர்ஆற்றல் [வலிமை] 
பார்ப்பன வயோதிகனின் அறியாமை சாபத்தால் 
தளர்ந்துற்றதாம்.  

மகாபாரதத்தில் உள்ள இந்நிகழ்வானது மனு(அ) 
நீதி சோழன் கால ஆரிய அக்கிரம குற்றச்சாட்டு 
மற்றும் கொலை சம்பவத்தை நினைவுப்படுத்து
கிறது. முறையே ஆராய ஆரியர்தாம் மூர்க்க அரக்
கர்.  இரக்க குணமற்றவன் எனும் அர்த்தத்தில் 
அரக்கன் என்கின்ற சொல்லால் தமிழனை அவ
மதித்திட ஆரியன் உருவாக்கி யிருக்கிறான்.  
ஆனால் அரக்கர் என்பது ஆரியர்தாம். இதற்கு 
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் அன்ன 
மேற்படி மகாபாரத நிகழ்வு [கதைப்படிக்கு] ஆதார 
மாகின்றது. 

அந்தப்படிக்கு வந்தேறிகளின் அன்னிய ஏற்பா
டாக மகளிர் குறிவழி சாதி எனும்படிக்கு பார்
பனப் பண்பாடு பலபிழைகளில் நாடு முழுவ
தும் கவலைப்பட பரவிட அவ்வாறான ஆரியர் 
ஊடுறுவலை தடுக்கவே முருகன் இமயம்விலகி 
பழனிமலை சென்று படைத் திரட்டிட்டான்.  "ஆரி
யனே வெளியேறு" என்று தம்மூதாதையர் முன்
னோர் நாகர்மா மன்னர்கள்வழி தமிழ் தோன்ற
லாகி அதேநேரம் கந்தனுக்கு தகப்பன் என்று 
ஆரியர்களால் கற்பனை செய்யப்பட்ட சிவனை
யும் எதிர்த்தான்.

பரசுராமனை முருகன்தான் கொன்றான் என்ப
தாக கதைப் படுத்தியிருந்தால் அது பார்பனர் 
ஆதிக்க சரிவு அவமான அடையாளம் என்று 
ஆகிடகூடும் என்பதால் ஆரிய பரசுராமனை, 
பத்மாசுரன் என்பதாவும் மேலும் அரக்கன் என்ப 
தாகவும் வதந்தியை பரப்பிட்டான்.

பத்மாசுரன் அரக்கன் என்று சொல்வது உண்மை 
யானால் ஆதித்தமிழன் முருகனைப் போல் பத்மா 
சுரனும் ஆரியர்களை அன்றைய சூழலில் இந்நாடு 
விட்டு துரத்த போர் தொடுத்திருக்க வேணடும். 
பத்மாசுரன் ஆரியனே. ஆதி நாகனோ தமிழனோ 
அல்ல. அதாவது ஆரிய பரசு ராமன்தான் அரக்கன் 
பத்ம[நாப] சுரன் ஆகியிருக்கிறான். எடுத்துக்காட்
டாக விவரங்கள் மேலும் பின் வருமாறு: 

கடவம் என்றால் நாடு, கேடயம், போர்படை ஆம். 
ஆக, கடவ [நாடு] உடமையாளன் கடவுள்.  அதா
வது நாடு, கேடயம், போர்படை ஆகியவற்றுக்கு 
உரிமையானவன் கடவுள்; அதனால் கடவுள் 
எனும்சொல் நாடு[கடவம்] ஆண்ட அரசன் என் 
றாகின்றது.  மாமன்னன் முருகனுக்கு தமிழ் 
அரசர்களுள் ஒருவனும் பகைவனாக இருந்திட்ட 
தில்லை. அவ்வாறு கந்தன் தமிழர் எவரையும் 
கொன்றிட்டதாக புராணம் மெய்யாக இல்லை.  
வந்தேறி ஆரியனின் அநாகரிகமான "பெண்குறி 
வழி சாதி" அமைப்புகட்கு எதிரான தழிழ் மன்னர்
களை சத்ரு என்றும் அரக்கன் என்றும் பறைந் 
திட்டான்.

பத்ம என்பது பார்பன மொழி சார்ந்திட்ட பெயர் 
சொல். [எடுத்துக் காட்டு:  பத்மா, பத்மநாபன் 
மேலும் பத்மாவதி முதலானவை] ஆக, பத்மா 
என்பது தமிழ்சொல்லாக அருகதை பெற்றிருந் 
திட்டதில்லை. அந்தப்படிக்கு சுரன் என்பதும் ஆரி
யனை குறிப்பது [வீர மற்றவன் அதாவது சோம்
பேரி எனும் பொருளுடையது].  பத்மன்சுரன் என் 
பது பத்மாசுரன் என்றும் மற்றும் அரக்கன் என்
றும் எவனோ பார்ப்பான் தமிழர்களை வழக்கம்
போல் திசைத் திருப்பி ஏமாற்றிட்டிட்டான். 

தமிழர் மயங்கும் பாஉரை அய்யன் பாணன் 
முருகன்.  பாணன் என்பது பா(படைத்த) இனன். 
மலைகளும் மலைகள் சார்ந்த வனங்களும் கந் 
தனின் செல்வம்.  தனம் என்பது செல்வம் என்று 
ஆக, காண்தன(வேந்தன்) 'கந்தன்' என்றாயிற்று. 
அந்தப்படிக்கு பழனிமலை துவங்கி தெற்கும் 
கிழக்கும் கடற்கரைகள் எல்லைகளாக திருப்பதி 
முடியவும் அதற்கப்பாலும் ஆரியனை வென்று 
பரவலாக ஆட்சி புரிந்திட்டவன். 

கதைப்படி கந்தன் காலத்தில் சேர சோழ பாண்டி
யன் என்றில்லை; ஆனால் இந்திய வரலாறு 
படிக்கு, இந்திய துணை கண்டம் முழுவதும் [பாகி
ஸ்தான் ஆப்கானிஸ்தான் உட்பட] ஒருகுடைக்கீழ் 
ஆண்ட நெடியோன் எனும் பெயர் கொண்ட பாண்டி 
யன்தான் கந்தன் என்றால் எதிரிகள் என்று தமிழ் 
அரசர்களில் [பார்ப்பன ஏடு ஓதும் பாட்டுப்படிக்கு 
அரக்கர்களில்] ஒருவரையும் முருகன் கொன்றதாக 
கதை இல்லை. அவ்வாறு கதை ஏதும் இருந்தால் 
அது கற்பனை; அதாவது பொய்.

சரித்திரப் புகழ் பெற்ற சாம்ராட் அசோகர் வாழ்கை
யில் நடந்துற்ற நிகழ்வுகளில் பலவற்றை புத்தமத 
குருக்களாக செயற்பட்ட சிந்து மட ஆதிபதிகள் [ஆரி
யர்கள்] இன்று ஆரியர் அல்லாதவர்களிடை
யே மோடி இந்தியை திணிப்பதுபோல் சாம்ராட் 
அசோகர் மறைவுக்குப்பின் மகாபாரதம் கதை
யை தொடர்புப்படுத்தி இந்துத்துவாவை நுழைக்க 
முன்னேற்பாடாக இருட்டடிப்புச் செய்திட்டது  
தெரிகிறது.  

தமிழ் முப்பாட்டன் திருவள்ளுவர் கடவுள் நம்பிக்
கை ஒழிப்பு அடிப்படையில் படைத்திட்ட நூற்றுக்கு
மேல் வெண்பாக்கள் விருத்தப் பாக்கள் புலக்கத்
தில் இருந்திட்டதை இன்று தமிழ் மக்கள் படித்து 
அறிவில் தெளிந்திடாதவாறு தடுக்கும் நோக்கத்
தில் வந்தேறிகள் அழித்திட்டனர். தமிழ் சித்தர் சிவ
வாக்கியர் படைப்புக்களில் ஆரியர்கள் பல இணை
ப்புக்களை மனம்போன போக்கில் திராவிடர்களை 
தொடர்ந்து சமய அடிமைகளாக வைத்திருக்கும் 
உள்நோக்கத்தில் சொருகி யிருக்கின்றனர். சிவ
வாக்கியரின் சொந்தக் கருத்துக்களை அவருடைய 
பாக்களில் இல்லாதவாறும் பல பாடல்களில் ஈற்றடி
களை இரண்டிரண்டாக மூலவரிகளை அகற்றி...
யிருக்கின்றனர்.

அதே நடைமுறையை பத்மசுரன் பெயர் மாற்றத்
தோடு அவன் அரக்கன் என்பதாகவும் அவன் 
கொலையுண்ட நிகழ்வில் திராவிடர் தலைவன் 
முருகனது வீரச்செயல்களை ஆரியமயமாக்கி 
யிருக்கின்றனர். தெரிந்தும் தமிழ் தாய்தன் திரா
விட குழந்தைகளை வலிமை குறைவுறாதவாறு 
பாலூட்டி தாழாட்டி பூரிக்கின்றாள்!

புற்றுமதம் ஆயிற்று; போகசாதி பாம்புஅன்ன...
சுற்றபயம்! பக்தி, சுரண்டுவோன்வாழ் வாயிற்று!
தொற்றுபேத நோய்ப்பற்ற, 'வேற்றுமை' நாடாயிற்று!
ஒற்று மை(உ)யிர்போ யிற்று!

Public

1w
Photo

Public

22h
Photo

Uuuu

No comments:

Post a Comment