5
தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருக்கும்
விவசாயிகள் தற்கொலை அதிர்ச்சி அளிப்பது மட்டு
மல்ல, அடி மனதை உலுக்கும் விதத்தில் இருக்கிறது...
காவிரி மேலாண்மை வாரியம் அமைந்
துற தமிழகத்தில் ஆளும் அஇஅதிமுக
அரசு, எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து
மைய அரசை நிர்பந்தித்திட முற்பட
வில்லை.
உச்ச நீதிமன்ற ஆணை அடிப்படையிலும்
மற்றும் சந்தர்ப்ப சாட்சியங்களின் ஆதாரங்
கள் பேரிலும் மைய அரசு காவிரி மேலாண்
மை வாரியம் அமைத்திடாதது, தவறான
முன்னுதாரணம் ஆகிஉள்ளது.
இந்நெருக்கடியிடையே எதிர்கட்சிகளாக
இருந்திடும் திமுக மற்றும் மநகூட்டணி
தனித்தனியே மேற்கொண்ட முயற்சி
கட்கு பாமக, தேமுதிக மற்றும் கற்பனை
[காணல் நீர்] கடவுள்களால் ஓட்டுகளைப்
பெற முயற்சிக்கும் 'ஊழல் கடவுள் அவ
தாரங்கள்' ஒத்துழைப்பும் தமிழக அரசிய
லுக்குள் இல்லை.
ஆக, தமிழக அரசியல் கட்சிகளிடையே
ஒட்டு மொத்தமாக தமிழுணர்வு பின்ன
டைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்
தமிழர் அனைவரும் ஒன்றுபட தடை
யாக, சாதீய உணர்வுகள் அமைப்புக்கு...
அமைப்பு மாறுபட்ட சாதி கொள்கை
களால் தவறாக பிண்ணப்பட்டு ஒற்றுமை
உலுத்துப் போயிற்று.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க
எதிர்ப்புத் தெரிவித்திடும் கர்னாடக மாநிலம்
மக்கள் ஒற்றுமை வலிமைப் போன்று தமி
ழகத்தில் அவ்வாறு அவ்வாரியம் அமைக்
படுவதற்கு ஆதரவாக ஒற்றுமை உருவாகி
டாத நிலைமைக்கு கட்சிக்கு... கட்சி பிளவுப்
படும் கள்ள சாதி உணர்வுகளன்றி வேறு
காரணம் தனிப்பட தமிழ்நாடு அரசியல்
கட்சிகளிடையே இல்லை.
அவ்வாறு காரணம் ஏதும் இருப்பதாக நம்
பிடும் பட்சத்தில் [நம்பப்படுவது கட்சி மதம்
சித்தாந்தங்கள் உட்பட எதுவாயினும்] சாதி
உணர்வுகட்கு அடுத்த படியாகவே அதாவது
இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுகிறது.
தமிழகத்தை எந்த சாதி அல்லது யாருடைய
சாதியைச் சார்ந்தவன் ஆள வேண்டும் என்
கின்ற இறுதி முடிவை உறுதியாக மேற்
கொள்ள முடியாத குழப்ப நிலவரம் தமிழர்
ஒற்றுமை இன்மைக்கு அடிமையாகி இருக்
கின்றது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழரை
ஆலய வழிபாடுகளில் நடைமுறையில்
உள்ளது போன்று தமிழ்மொழி உணர்
வால் ஆட்கொள்ளாது போனாலும் நாடு
ஆளுகிறவன், எவனாகவோ...
[கோயில்களில் ஓதுகிறவனும் மதம்
அப்பாற்பட்டு தமிழ் அல்லாத வேறு மா
நிலத்தவனாகவோ தாய் மொழியின
னாகவோ]
-- இருந்து விட்டுப் போகட்டும் கவலையில்
லை! ஆனால் "அந்த சாதியை சார்ந்த"
தலைவன் ஒருவனின் கூட்டணியில் உள்ள
எந்த கட்சியும் ஆட்சிக்கு வரக்கூடாது எனும்
படிக்கு...
மகா-அநாகரிகமான சாதி அரசியல் தீண்
டாமை தொழு நோயால் 'திராவிடக்கட்சிகள்'
என்று சாடுகின்ற மற்றும் தமிழர் அரசி
யல் வள்ளலார்போல் தம்மை போற்றிக்
கொண்டிருப்போருள்ளும் மேலோங்கி
இருக்கின்றது.
இந்நிலையாலேயே மொழியால் அனை
வரும் தமிழர் என்றாலும், மண்ணின்
மைந்தர்கள் என்று உணர்ச்சியில் தமிழ
னாக இருந்து உயிரை விட்டாலும், ஆளு
கிறவனாக தகுதியிருந்தாலும், ஆட்சிக்கு
வரமுடியாது!
அப்படி ஆட்சியை மண்ணின் மைந்தர்
களில் எவரேனும் கைப்பற்றிடக் கூடும்
என்று கவலைப்படுகிற தன்மையால்
ஒட்டு மொத்த மக்கள் நலைனை உள்
ளடக்கிய காவிரி மேலாண்மை வாரியம்
அமைந்துற ஒன்றுப்பட்டு போராடும்
நிலைப்பாட்டை கைவிடுகிற நிலையா
லும், கடவுள் நம்பிக்கை போலவே
தமிழர் ஒற்றுமையும் காணல் நீராகிட்டது.
ஆக தமிழரிடையே ஒற்றுமை வலுவாகிட
மேற்கொண்டு எத்தனை நிலமுள்ள விவ
சாயிகள் (சூத்திரர்கள்) தற்கொலை செய்
திடும் நிலவரத்திற்கு தள்ளப்படுவாரோ?
[சாதிகள் விலகிய தமிழ் காதலர்கள் ஏக்கம்
அன்ன] தமிழக ஒற்றுமைக்கு வருந்துவதே
[வெற்று முழக்கமே!] எனும்படிக்கு நிலைமை
அன்றாடம் தொடர்கின்றது.
No comments:
Post a Comment